பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை கிழக்கு பிரிவின் பொன்விழா கொண்டாட்டங்கள்
Posted On:
09 APR 2022 7:18PM by PIB Chennai
இந்திய கடற்படையின் கிழக்கு பிரிவு தனது பொன்விழாவை 06 மற்றும் 07 ஏப்ரல் 2022 அன்று விசாகப்பட்டினத்தில் பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
மலரஞ்சலி செலுத்தும் விழா, 'கிழக்கு கடல்சார் பகுதியில் வளர்ந்து வரும் சவால்கள் - கடற்படை கிழக்கு பிரிவின் எதிர்கால தயார்நிலை' என்ற கருப்பொருளிலான கருத்தரங்கு, விருது வழங்கும் விழா மற்றும் கடற்படை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடல் ஆகியவை கொண்டாட்டங்களின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கடற்படை கிழக்கு பிரிவு 1971-ல் உருவானது முதல் அதன் தற்போதைய உயர்ந்த நிலை வரையிலான அதன் வளர்ச்சியை உள்ளடக்கிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
பதினான்கு முன்னாள் கடற்படைத் தளபதிகள், கொடி அதிகாரிகள், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
கடற்படை கிழக்கு பிரிவு 2021-22-ம் ஆண்டில் செய்த சாதனைகள் மற்றும் சிறப்பான செயல்களை அங்கீகரிக்கும் கடற்படை விருதுகள் விழா 2022 பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து 07 ஏப்ரல் 2022 அன்று நடைபெற்றது.
ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழாவிற்கு கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தலைமை வகித்தார். கிழக்கு கடற்படையின் சிறந்த கப்பலாக ஐஎன்எஸ் ஷிவாலிக் தேர்வு செய்யப்பட்டது. ஐஎன்எஸ் காட்மட் சிறந்த கொர்வெட் வகை போர் கப்பலாக தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் ஐஎன்எஸ் சத்புரா மற்றும் ஐஎன்எஸ் கோராவுக்கு கூட்டாக ‘மோஸ்ட் ஸ்பிரிட்டட் ஷிப்’ கோப்பை வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815257
*****
(Release ID: 1815274)
Visitor Counter : 156