ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான பிராந்திய மாநாட்டிற்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் தலைமை தாங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 APR 2022 5:38PM by PIB Chennai

ஜல் ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) தொடர்பான மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மண்டல மாநாட்டுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார்.

கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட், டையு & டாமன் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டன.

கோவா மற்றும் டையு & டாமன் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலியில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் 99% மற்றும் இமாச்சல பிரதேசம் 93% இலக்கை எட்டியுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள் செயல்படுத்தலின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர், ராஜஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து மேற்கோள் காட்டினார். தண்ணீருக்காக  பெண்கள் தினமும் படும் சிரமத்தைப் போக்குவதற்கான முறையான வாய்ப்பாக ஜல் ஜீவன் திட்டத்தை பார்க்குமாறு பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார்.

சவால்களுக்கு இடையிலுலும் சமூகத்தை கட்டியெழுப்புவதே உண்மையான பணி என்று அவர் வலியுறுத்தினார். போதுமான அளவு, பரிந்துரைக்கப்பட்ட தரம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடிப்படையில் நீர் வழங்கல் சேவையின் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான தேவை குறித்து அவர் எடுத்துரைத்தார்.

மேற்கண்டவற்றை அடைய சமூக பொறுப்புணர்வை கட்டமைக்க வேண்டும் என்று கூறிய அவர், கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள எட்டு மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு 2022-23-ல் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய நிதியாக ரூ 32,608 கோடியும், தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) கீழ் ரூ 2,167 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேற்கண்ட எட்டு மாநிலங்களுக்கு குடி நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மைக்காக 15-வது நிதி ஆணையத்தின் கிழ் ஒன்றிணைந்த நிதியாக ரூ 7,632 கோடி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814904

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1815022) வருகையாளர் எண்ணிக்கை : 1074
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu