நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-ன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது; இருஅவைகளிலும் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன

Posted On: 07 APR 2022 5:17PM by PIB Chennai

2022 ஜனவரி 31 அன்று தொடங்கிய  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் இன்று (அதாவது 2022 ஏப்ரல் 7 வியாழன் அன்று) ஒத்திவைக்கப்பட்டது; இரு அவைகளும் 2021-22 பிப்ரவரி 11 அன்று இடைக்கால ஓய்வுக்காக ஒத்திவைக்கப்பட்டு துறை வாரியான நிலைக்குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்யவும், மானிய கோரிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் மீது விவாதிக்கவும், மார்ச் 14 அன்று மீண்டும் கூடின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பற்றி புதுதில்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் இருஅவைகளும் 27 நாட்கள் கூடியதாக கூறினார். 2022 ஏப்ரல் 8 வரை நடத்தப்படுவதாக இருந்த இந்த கூட்டத் தொடர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கை காரணமாக ஒருநாள் முன்கூட்டியே (07.04.2022) ஒத்திவைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால், 2022 ஜனவரி 31 அன்று இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.  குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது, விவாதிக்க மக்களவையில் 12 மணிநேரம் ஒதுக்கப்பட்ட போதும், 15 மணி 13 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது.  அதேபோல், மாநிலங்களவையில் 12 மணி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில்  12 மணி நேரம் 56 நிமிடம் விவாதிக்கப்பட்டது.  இந்தக் கூட்டத் தொடரின் முதலாவது பகுதியில் இந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் உரையாற்றினார். 

2022 பிப்ரவரி 1 அன்று 2022-23-க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இதன்மீதான பொது விவாதம் முதலாவது அமர்வின் பகுதியாக இருஅவைகளிலும் நடைபெற்றது.  இதற்கு மக்களவையில் 12 மணிநேரம் ஒதுக்கப்பட்ட போதும், 15 மணிநேரம் 35 நிமிடம் விவாதம் நடைபெற்றது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதி மசோதா மற்றும் நிதி ஒதுக்க மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு நிதிசார்ந்த மொத்த நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தில் மார்ச் 31-க்கு முன்னதாகவே நிறைவடைந்து விட்டன. 

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் (மக்களவையில் 12, மாநிலங்களவையில் 1) அறிமுகம் செய்யப்பட்டன.  13 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.  11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  இருஅவைகளிலும் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்ற விவரங்களையும் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்களான திரு அர்ஜுன் ராம் மெக்வால், திரு  வி முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814503

***************


(Release ID: 1814593) Visitor Counter : 265