வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மை இந்தியா இயக்கத்தின் முதன்மை நோக்கம்: சமுதாய/பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக தமிழகத்திற்கு ரூ 93.52 கோடி

Posted On: 07 APR 2022 1:32PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு கௌஷல் கிஷோர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள் மற்றும் சமூக/பொதுக் கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலம் 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைவதற்கான முதன்மை நோக்கங்களுடன் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் தொடங்கப்பட்டது.

30.9.2021 வரை நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்துவதற்காக 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1 அக்டோபர், 2021 அன்று தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 மூலம் இது நீட்டிக்கப்பட்டது.

தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் திட்டத்தின் தனிநபர் வீட்டு கழிப்பறைகளின் இலக்கு 58.99 லட்சம் ஆகும், ஆனால் 62.63 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

நகர்ப்புறம் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் சமுதாய/பொது கழிப்பறைகளின் இலக்கு 5.07 லட்சம் ஆகும், ஆனால் 6.21 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

 

தமிழ்நாட்டில் தனிநபர் வீட்டு கழிப்பறைகளை கட்டுவதற்காக ரூ 184.02 கோடியும், சமுதாய/பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக ரூ 93.52 கோடியும் திட்டக் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தனிநபர் வீட்டு கழிப்பறைகளை கட்டுவதற்காக ரூ 209.84 கோடியும், சமுதாய/பொது கழிப்பறைகள் கட்டுவதற்காக ரூ 71.38 கோடியும் தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814401

***************



(Release ID: 1814472) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Manipuri , Bengali