ஜல்சக்தி அமைச்சகம்
2022-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஜெய்ப்பூரில் 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய ஜல் சக்தி அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2022 11:46AM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் – கிராமின் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழி வகைகளை மதிப்பாய்வு செய்வதற்காக 8 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறுகிறது. கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், லடாக், டாமன் - டையூ, தாதர் மற்றும் நாகர் - ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன. இம்மாநாட்டில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் மற்றும் கிராமப்புற குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறையின் மூத்த அதிகாரிகளும் நேரில் பங்கேற்கின்றனர்.
இம்மாநாடு, தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் வரையப்பட்ட அம்சங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அறிந்து கொள்வது மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றின் மூலம் அதற்கான சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் இரண்டு முக்கிய திட்டங்களின் கீழ் அடைந்துள்ள முன்னேற்றம், பல்வேறு திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், திட்ட பணிகளை முன்னெடுத்து செல்வது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும். குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்கும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.
ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான விவாதங்கள், பணியின் தரம், செயல்படுத்தும் வேகம், மென்பொருள் செயல்பாடுகளான பயிற்சி, திறன், திறன் மேம்பாட்டு திட்டங்கள், நீர் தர கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கும். முற்பகலில் நடைபெறும் அமர்வுகளில், இயக்கத்தின் பணிகளை மறுஆய்வு செய்வது மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்படும். அதே வேளையில், இரண்டாம் பாதியில் பணிகளின் தரம், கிரே வாட்டர் மேலாண்மை, நீடித்த ஆதாரங்களின் அளவீடுகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து துறை சார்ந்த நிபுணர்களின் தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெறும்.
“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை," மற்றும் அனைவரின் முயற்சி ” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து, நாட்டில் 107 மாவட்டங்கள், 70 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1.46 லட்சம் கிராமங்கள் ‘பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு ’ கொண்டதாக மாறியுள்ளன.
மூன்று மாநிலங்கள் - கோவா, தெலுங்கானா மற்றும் ஹரியானா மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் - அந்தமான் - நிக்கோபார், நாகர் ஹவேலி - டாமன் - டையு மற்றும் புதுச்சேரி ஆகியவை 100% குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த இரண்டரை ஆண்டுகளில், 6.15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் 06.04.2022 நிலவரப்படி சுமார் 9.39 கோடி (48.61%) குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்புகளைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 8.55 லட்சத்திற்கும் அதிகமான (83%) பள்ளிகள் மற்றும் 8.82 லட்சம் (79%) அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814355
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1814417)
வருகையாளர் எண்ணிக்கை : 485