தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களின் எண்ணிக்கை
Posted On:
06 APR 2022 1:44PM by PIB Chennai
2012-ம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பு துறையில் ஒரு ஒருங்கிணைப்பு உள்ளது. ஒருங்கிணைப்புக்குப் பிறகும், ஒவ்வொரு உரிமம் பெற்ற சேவைப் பகுதியிலும் ஒரு பொதுத்துறை நிறுவனம் (BSNL/MTNL) உட்பட குறைந்தபட்சம் நான்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (TSPs) இருப்பதால் இந்தத் துறையில் போதுமான போட்டி நிலவுகிறது. நாடு 22 உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ரேடியோ ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துகிறது. தொலைத்தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை, நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் கணிசமான அதிகரிப்பில் இருந்து இது தெளிவாகிறது. நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 6,49,834-ல் இருந்து (31.03.2014 நிலவரப்படி) 23,25,948 ஆக (28.02.2022 வரை) அதிகரித்துள்ளது. தற்போது, (31.12.2021 நிலவரப்படி) இந்தியாவில் மொபைல் நெட்வொர்க்குகள் 115 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு சேவை செய்கின்றன. ஏறக்குறைய, 98% மக்கள் 4G நெட்வொர்க்கில் உள்ளனர். மேலும், 2016-ம் ஆண்டு முதல் அழைப்பு மற்றும் தரவுகளுக்கான கட்டணங்களில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டுள்ளது, இது தொலைத்தொடர்பு துறையில் போதுமான போட்டி இருப்பதையும் குறிக்கிறது.
சீரமைக்கப்பட்ட மொத்த வருவாய் (AGR) வரையறை மற்றும் வட்டி விகிதங்களை பகுப்பாய்தல், அபராத தொகைகளை நீக்குதல், வங்கி உத்தரவாதங்களின் தேவைகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் தானியங்கி வழித்தடத்தின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தல் ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகள் தொடர்பான ஊடகக் குறிப்பு -3 (2020 தொடர்) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
இந்த சீர்திருத்தங்கள் ஆரோக்கியமான போட்டி, பணப்புழக்கம், முதலீட்டை ஊக்குவிப்பதுடன் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு (TSPs) ஒழுங்குமுறை தொடர்பான சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814034
***************
(Release ID: 1814106)
Visitor Counter : 158