தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
செல்போன் கோபுரங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
06 APR 2022 1:43PM by PIB Chennai
நாட்டின் தொலைதூரப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு சேவைகளை மக்களுக்கு வழங்கும் வகையில் செல்போன் கோபுரங்களை அமைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான சேவை நிதியம் ஒன்றையும் அரசு அமைத்துள்ளது.
செல்போன் கோபுரங்களை தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அமைக்கின்றன. செல்போன் சேவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
செல்போன் கோபுரங்களை அமைப்பதற்கு உலக சுகாதார அமைப்பு, கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பரிந்துரைத்துள்ள சிறந்த நடைமுறைகளையும் தரக்கட்டுப்பாடுகளையும் தொலைத்தொடர்புத் துறை பின்பற்றி வருகிறது. இதனையொட்டி விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசுகளின் அனுமதிக்கு இணங்க செல்போன் கோபுரங்களை சேவை வழங்கும் நிறுவனங்கள் அமைத்துக் கொள்ளலாம். இந்த விதிமுறைகள் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கும் பொருந்தும்.
மக்களவையில் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814033
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1814064)
வருகையாளர் எண்ணிக்கை : 245