கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கலாச்சார தளத்தில் மொத்தம் 2.98 லட்சம் டிஜிட்டல் கலைப்பொருட்கள் உள்ளன: அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி

प्रविष्टि तिथि: 04 APR 2022 3:49PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

மும்பை ஐஐடியுடன் இணைந்து www.indianculture.gov.in என்ற இந்திய கலாச்சார தளத்தின் மூலம் இந்திய தேசிய காணொலி நூலகத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. பல்வேறு கலாச்சார, கலைப்பொருட்களின் டிஜிட்டல் பாதுகாப்பிற்கான தளத்தை வழங்குவது மற்றும் அவற்றின் பகிரப்பட்ட பாரம்பரியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் கூட்டு உரிமை உணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.

இந்த திட்டம் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை அடிந்துள்ளது. 34 லட்சத்திற்கும் அதிகமான நூலியல் உள்ளீடுகளுடன் மொத்தம் சுமார் 2.98 லட்சம் டிஜிட்டல் கலைப்பொருட்கள் இந்த தளத்தில் உள்ளன.

அரிய புத்தகங்கள், மின் புத்தகங்கள், காப்பகங்கள், ஓவியங்கள், கதைகள், துணுக்குகள், வரலாற்று நகரங்கள் மற்றும் கோட்டைகள் போன்ற 28 பிரிவுகளில் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் தற்போது இந்த நூலகம் கிடைக்கிறது. இந்தியன் கல்ச்சர் எனப்படும் செயலி மூலம் அணுகலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் ஆகிய இரண்டிலும் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813189


(रिलीज़ आईडी: 1813345) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Telugu , Kannada