குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு
Posted On:
04 APR 2022 1:11PM by PIB Chennai
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் வேளாண்மை அல்லாத துறையில் குறுந்தொழில் நிறுவனங்களில் சுயவேலைவாய்ப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.
தேனீ வளர்த்தல், மண்பாண்டம் செய்வோருக்கு மின்சாரத்தால் இயங்கும் சக்கரங்கள் வழங்குதல் ஆகியவை சுயவேலைவாய்ப்புக்கு அமலாக்கப்படுகின்றன. இதை தவிர குறு மற்றும் சிறு தொழில்களில் பாரம்பரிய தொழில்களை மாற்றுவதற்கான நிதியுதவி திட்டம், குறு, சிறு தொழில் நிறுவனங்களை கூட்டாக அமைக்கும் திட்டம், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டம் ஆகியவையும் அமல்படுத்தப்படுவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு.பானுபிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகைய திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் 2018-19-ல் 41,480-ம், 2019-20-ல் 41,384-ம், 2020-21-ல் 41,504-ம் சுயவேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். புதுச்சேரியில் இதே காலகட்டத்தில் முறையே 608,512,352 சுயவேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813115
***************
(Release ID: 1813156)
Visitor Counter : 263