வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஏற்றுமதி இலக்கை விஞ்சி, 2021-22-ல் 417.8 பில்லியன் டாலரை எட்டியது

प्रविष्टि तिथि: 03 APR 2022 5:58PM by PIB Chennai

இந்தியாவின் ஏற்றுமதி முடிவடைந்த நிதியாண்டில் 417.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் 40.38 பில்லியன் என்ற அதிக அளவாக இருந்தது. இருந்து முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 14.53% அதிகமாகும். 
2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான காலத்தில், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 32.62% அதிகரித்து 352.76 பில்லியன் டாலராக இருந்தது. 
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா உள்ளூர் பொருட்களை உலக அளவில் எடுத்துச் செல்வதில் உண்மையிலேயே ஈடுபட்டுள்ளது என்றார். 
இந்தியப் பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு கோயல், பிரதமர் நிர்ணயித்துள்ள மகத்தான இலக்குகளை எட்டும் திறனை நமது நாடு பெற்றுள்ளதாக தெரிவித்தார். இயலாததை இயன்றதாக்க, அயராமல் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 
மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812990


***************
 


(रिलीज़ आईडी: 1813006) आगंतुक पटल : 359
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi