பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ தலைமை தளபதி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 03 APR 2022 5:00PM by PIB Chennai

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, சிங்கப்பூரில் 4 முதல் 6-ந்தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமது பயணத்தின் போது, அவர் அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களைச் சந்திக்கிறார்.

4-ந்தேதி, ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். ராணுவ தளபதி, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திப்பார். இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிப்பார்.

சாங்கி கடற்படை தளம், இன்போ பியூசன் மையம், பிராந்திய எச்ஏடிஆர் ஒத்துழைப்பு மையம் உள்ளிட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர் சென்று பார்வையிடுவார்.

***************(Release ID: 1813001) Visitor Counter : 186