குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் துர்மெனிக்ஸ்தான் பயணத்தின் போது வெளியிட்ட அறிக்கை
Posted On:
02 APR 2022 2:26PM by PIB Chennai
துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு முதன் முறையாக தாம் வந்துள்ளதாகவும் அதிபர் செர்தார் பெர்டிமுஹாமிதோவ் தம்மையும், தமது குழுவினரையும் சிறப்பாக வரவேற்று விருந்தோம்பல் செய்ததை தாம் பாராட்டுவதாகவும் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை இது பிரதிபலிப்பதாக அவர் கூறினார். இந்தியா – துர்க்மெனிஸ்தான் இடையே தூதரக உறவு தொடங்கி 30 ஆண்டு நிறைவடைந்துள்ளதாகவும், இக்காலக்கட்டங்களில் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு ஒப்பந்தத்திலும் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்திருப்பது திருப்திகரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். துர்க்மெனிஸ்தான் அதிபருடன் தாம் இன்று நடத்திய பேச்சுக்களில் இருநாடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்ததாகக் கூறினார். பல்வேறு பிராந்தியம் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக தாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கூறினார். வர்த்தக உறவுகள் குறித்து பேசியதாகவும், இருதரப்பு வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாட்டு தொழில்துறையினரும் இருதரப்பு ஒழுங்குமுறைகளை அறிந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டில் புதிய வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் நிதி நுண்ணறிவுப் பிரிவு, துர்க்மெனிஸ்தானின் நிதிக் கண்காணிப்புச் சேவை ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இருநாட்டு பொருளாதார ஒத்துழைப்பின் கட்டமைப்பு மேலும் வலுபெறும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812744
------
(Release ID: 1812767)
Visitor Counter : 247