நிலக்கரி அமைச்சகம்
4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன
प्रविष्टि तिथि:
02 APR 2022 12:18PM by PIB Chennai
மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஐந்து நிலக்கரி சுரங்கங்களின் புவியியல் இருப்பு 665.08 மில்லியன் டன் ஆகும். இந்தச் சுரங்கங்களின் ஆண்டு ஒட்டுமொத்த இருப்பு 14.756 மெட்ரிக் டன் ஆகும். சத்தீஷ்கர்., ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. இந்த ஐந்து நிலக்கரிச் சுரங்கங்களுடன் இதுவரை 47 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மொத்த ஆண்டு இருப்பு 101.440 மில்லியன் டன் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812695
*****
(रिलीज़ आईडी: 1812765)
आगंतुक पटल : 225