தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிடி இலவச டிஷ்-இல் “MyCam’’ என்ற புதிய அலைவரிசை இணைப்பு

प्रविष्टि तिथि: 31 MAR 2022 2:46PM by PIB Chennai

தொலைக்காட்சி ஒளிபரப்பு பகிர்மான தொழிலில் ஈடு இணையற்ற வளர்ச்சி அடைந்து வரும் தூர்தர்ஷன் இலவச டிஷ், 43 மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளில் பயன்படுத்தப்படுவதன் மூலம், மிகப்பெரிய டிடிஹெச் தளமாக உருவெடுத்துள்ளது.  மேம்படுத்தப்பட்ட ஏல நடவடிக்கைகள், மேம்பட்ட தரம், அலைவரிசைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

2017-2022 வரையிலான காலத்தில் மட்டும் தூர்தர்ஷனின் இலவச டிடிஹெச் சேவை அபரிமித வளர்ச்சி அடைந்து 2017-ல் 22 மில்லியன் இணைப்புகளாக இருந்த நிலையில், 2022-ல் 43 மில்லியன் இணைப்புகளை எட்டி, ஏறத்தாழ 100% வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஃபிக்கி – பொழுதுபோக்கு அமைப்பு அண்மையில் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், டிடி இலவச டிஷ் செட்-டாப் பாக்ஸ் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது.      

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 21 மில்லியன் வாடிக்கையாளர்கள் இலவச டிஷ் இணைப்பை கூடுதலாக பெற்றுள்ளனர்.   இந்நிலையில், டிடி இலவச டிஷ்ஷில் “MyCam’’ என்ற விளையாட்டு அலைவரிசை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.   இது விளையாட்டு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியதாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811893

***************


(रिलीज़ आईडी: 1812088) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , हिन्दी , Punjabi , English , Bengali , Gujarati