பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் நலன்
प्रविष्टि तिथि:
30 MAR 2022 2:46PM by PIB Chennai
கொவிட்-19க்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு காப்பீட்டுத்திட்டம் தொடங்கப்பட்டு, விரிவான தனிநபர் விபத்துக் காப்பீடாக ரூ.50 லட்சத்திலிருந்து 22.12 லட்சம் வரை வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டம் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள மற்றும் அவர்களை கவனித்துக் கொள்வதால், தொற்றுப் பாதிப்பு அபாயம் உள்ள ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளார்.
இதுபோன்ற பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள், சோப், மற்றும் கிருமி நாசினி போன்ற உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இது தவிர தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கும், பள்ளிக்கூடங்களில் சூடான உணவுகளை தயாரிக்கும் மற்றும் பரிமாறும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811396
***************
(रिलीज़ आईडी: 1811596)
आगंतुक पटल : 413