சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்த குடிமக்கள் குறித்த தேசிய கொள்கை

Posted On: 29 MAR 2022 4:34PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்  பிரதிமா பவுமிக் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

1999 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வயது முதிர்ந்தோருக்கான தேசிய கொள்கை இன்னும் அமலில் உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கான நிதி மற்றும் உணவு பாதுகாப்பு, உடல்நலம், இருப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய மாநில ஆதரவை இக்கொள்கை வலியுறுத்துகிறது. மாற்றப்படும் வரை அல்லது புதுப்பிக்கப்படும் வரை இந்த கொள்கை அமலில் இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கு நன்றாக கவனித்துக் கொள்ளும் குடும்பம் மற்றும் குறைந்த விலையிலான மருத்துவ சேவைகள் தேவை. மூத்த குடிமக்களுக்கான வருமான வரி சலுகைகள், ஓய்வூதியங்கள், பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவை தொடர்பான பல்வேறு திட்டங்கள் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810975

                           ********************

 

 

 



(Release ID: 1811104) Visitor Counter : 114


Read this release in: English , Urdu , Bengali , Malayalam