பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய பாதுகாப்பு சேவை மற்றும் சைனிக் பள்ளிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம்: மத்திய இணையமைச்சர் தகவல்
Posted On:
28 MAR 2022 2:33PM by PIB Chennai
தேசிய பாதுகாப்பு அகாடமி நவம்பர் 2021 தேர்வை 116891 மகளிர் எழுதி உள்ளனர். ஜூலை 2022 தேர்வுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ராணுவ நர்சிங் அதிகாரிகள் 4734 பேர் உள்பட 10493 பெண் அதிகாரிகள் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றி வருகின்றனர். ஆட்சேர்ப்பு என்பது மனித வள தேவைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளில் பங்கினை பூர்த்தி செய்வதை பொறுத்தது.
2021 – 2022 கல்வியாண்டு முதல் அனைத்து 33 சைனிக் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மிசோரமில் உள்ள சிங்சிப் சைனிக் பள்ளியில் கடந்த 2018 -19ஆம் கல்வியாண்டில் சைனிக் பள்ளி சங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொள்கை படி முதன்முதலாக பெண் குழந்தைகள் சோதனை முறையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் பிறகு அனைத்து சைனிக் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பில் உள்ள காலியிடத்தில் 10 % அல்லது 10 பெண் குழந்தைகள் இதில் எது அதிகமாக உள்ளதோ அதன்படி பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2021 -2022 ஆம் கல்வியாண்டில் 33 பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் 320 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை பாதுகாப்பு இணையமைச்சர் திரு. அஜய்பட் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1810594)