மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மும்பை ஐஐடியில் மாணவர்களுக்கு புதிய விடுதி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார்
Posted On:
27 MAR 2022 4:42PM by PIB Chennai
மும்பை ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கான புதிய விடுதியை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் திறந்து வைத்து மரக்கன்றையும் நட்டு வைத்தார்.
இந்த விடுதி திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
தரமான மாணவர்கள், பேராசிரியர்கள், பாடத்திட்டம் ஆகியவற்றுடன் தரமான வளாகமும் முக்கியமானது. நல்ல சூழல், மாணவர்கள் வாழ்வில் 50 சதவீத நேர்மறையை உருவாக்குகிறது. நீங்கள் நேர்மறையாக இருந்தால், சவுகரியமாக இருப்பீர்கள். புதுமை கண்டுபிடிக்கும் திறன் மற்றும் பங்களிப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இன்று, மிகச் சிறந்த மும்பை ஐஐடி வளாகத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம்.
புதிய விடுதியில் 1,115 அறைகள் உள்ளன. இதற்காக ரூ.117 கோடி, உயர்கல்வி நிதி நிறுவனம் மூலம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஐஐடி வேலை அளிப்பவர்களையும், தொழில் முனைவோர்களையும் உருவாக்க வேண்டும், தொழிலாளர்களை அல்ல என்று எதிர்பார்க்கிறேன். இங்கு படிக்கும் திறமையான மாணவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகவம், புதுமை கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவாக, வலுவான மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கியம் பணியாற்றுவர் என்று நம்புகிறேன்.
ஐஐடி-யில் படித்த மாணவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இது மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். பழைய ஐஐடிக்கள் 6 ஒன்றிணைந்து, உலக பொருளாதாரத்தில் 300 முதல் 400 பில்லியன் டாலர் அளவுக்கு பங்களிப்பை அளித்துள்ளனர். மும்பை ஐஐடி சூழலில் இருந்து வெளிவருபவர்கள் சுயநலத்துடன் இருக்கமாட்டார்கள். நமது முன்னாள் மாணவர்கள் உலக நலனைப் பற்றி சிந்திப்பவர்கள்.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1810239
************
(Release ID: 1810294)
Visitor Counter : 219