குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ராஜஸ்தானில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க காதித் துறை ஏற்பாடு
प्रविष्टि तिथि:
27 MAR 2022 12:57PM by PIB Chennai
ராஜஸ்தானில் சுய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ( கேவிஐசி) முன்முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜோத்பூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், கேவிஐசி தலைவர் திரு வினய் குமார் சாக்சேனா, கைவினைக் கலைஞர்களுக்கு எந்திரங்களை வழங்கினார். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 200 மின் குயவுச் சக்கரங்கள், தச்சர்களுக்கு 240 கழிவு மர உபகரணங்கள், 450 உள்ளூர் கைவினைஞர்களுக்கு காகிதத் தட்டு தயாரிக்கும் 10 டோனா எந்திரங்கள் வழங்கப்பட்டன. கேவிஐசியால் பயிற்சி அளிக்கப்பட்ட ஜெய்சால்மர், பார்மர், நாகாவுர் மாவட்டங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்பட்டன.
காதி நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டு வருகிறது. மண்பாண்டத் தொழில் போன்ற பாரம்பரியத் தொழில்களை ஊக்குவிக்க, மண்பாண்டக் கலைஞர்களுக்கு மின்சார எந்திரங்கள் வழங்கப்படுகின்றன. ராஜஸ்தானில் இதுவரை, 5000-க்கும் அதிகமான மின்சார குயவுச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 14,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கழிவு மர வேலைப்பாடு உபகரணங்கள் 240 தச்சு குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பையும், காகிதத் தட்டு தயாரிக்கும் எந்திரங்கள் 50 பேருக்கும் வேலைவாய்ப்பையும் வழங்கும்.
**************
(रिलीज़ आईडी: 1810207)
आगंतुक पटल : 246