குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய கடற்படை கடந்த பல ஆண்டுகளாக தாக்குதலுக்கு தயாரானதாகவும், நம்பகமானதாகவும் ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்குகிறது: குடியரசுத்தலைவர் கோவிந்த்

Posted On: 25 MAR 2022 12:32PM by PIB Chennai

குஜராத்தின் ஜாம் நகரில் இன்று (மார்ச் 25,2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் வல்சூராவுக்கு குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய கடற்படை கடந்த பல ஆண்டுகளாக தாக்குதலுக்கு தயாரானதாகவும், நம்பகமானதாகவும் ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்குகிறது என்றும் இந்திய கடற்பகுதியில், முன்னுரிமை, பாதுகாப்பு, பங்குதாரராக உள்ளது என்றும் கூறினார். இந்திய கடற்படை கடற்பகுதியில் நமது தேசத்தின் நலன்களை  பாதுகாக்கிறது என்று அவர் தெரிவித்தார். தீர்மானகரமாகவும், உறுதியோடும் நமது விரிவான கடற்பகுதியின் நலன்களை பாதுகாக்க தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இது செயல்படுவது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது ராயல் இந்திய கடற்படையின் திறனை விரிவாக்க ஐஎன்எஸ் வல்சூரா பயிற்சிப் பள்ளியாக செயல்பட்டது என்பதை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர்,  கடந்த 79 ஆண்டுகளில் இது தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமாக மாறியுள்ளது என்றார்.

போர்க்காலத்திலும், சமாதான காலத்திலும், தேசத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஐஎன்எஸ் வல்சூராவுக்கு குடியரசுத்தலைவரின் கொடி அளிப்பது மிகப்பெரும் பெருமையான விஷயம் என்று திரு ராம் நாத் கோவிந்த் கூறினார். இன்று இதற்கு வழங்கப்பட்டுள்ள கவுரவம் என்பது இதனைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், மற்றும் வீரர்கள், வீராங்கனைகளின் பொறுப்புகளையும், அவர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.  தொழில்முறை ரீதியாகவும், அர்ப்பணிப்போடும் இவர்கள் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவையை  தொடர்வார்கள் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நமது சமூகத்திற்கும், நமது தேசத்திற்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறிய குடியரசுத்தலைவர், நம்மால் இயன்ற வகையில், சமூகத்திற்கு உதவி செய்து நன்றிக் கடனை திருப்பிச் செலுத்துவது நமது புனிதமான கடமையாகும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809533 

***************



(Release ID: 1809680) Visitor Counter : 190