வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் குடிசை பகுதிகளின் எண்ணிக்கை 51,688-லிருந்து 33,510 ஆக குறைந்துள்ளது

प्रविष्टि तिथि: 24 MAR 2022 3:25PM by PIB Chennai

நாட்டில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்காக மறுகுடியமர்வு உள்ளிட்ட பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.  எனினும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  விவகாரத் துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு, பயனாளிகளுக்கு வீடுகட்ட நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒரு வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கிறது.  குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக இதுவரை 4,51,050 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  

மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தபோது, மத்திய வீ‘ட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809161

***************


(रिलीज़ आईडी: 1809290) आगंतुक पटल : 272
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali