ரெயில்வே அமைச்சகம்
பொருளாதார வகுப்புப் பெட்டிகள் அறிமுகம்
Posted On:
23 MAR 2022 3:01PM by PIB Chennai
கபூர்தலாவிலுள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலை, குளிர்சாதன வசதி கொண்ட மூன்றடுக்கு பொருளாதார வகுப்பு 15 ரயில் பெட்டிகளை தயாரித்து அனுப்பியுள்ளது.
இந்த பெட்டிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் வருமாறு:
- வழக்கமான குளிர்சாதன 3 அடுக்கு பெட்டிகளில் இருக்கும் 72 படுக்கைகளுக்கு பதிலாக 83 படுக்கைகள் இருக்கும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தலா ஒரு கழிவறை வசதி.
- ஒவ்வொரு படுக்கைக்கும் தனித் தனி குளிரூட்டி வசதி.
- மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன வடிவமைப்புடன்கூடிய இருக்கைகள் & படுக்கைகள், மடக்கும் வசதி கொண்ட நொறுக்குத்தீனி மேசை & தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி.
- ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி வாசிப்பு விளக்கு, யுஎஸ்பி போர்ட்டுடன் கூடிய செல்போன் சார்ஜ் செய்யும் வசதி.
- EN 45545-2 HL3 தரத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தீ தடுப்பு வசதி.
15-03-2022 நிலவரப்படி 65 பொருளாதார வகுப்பு ரயில் பொட்டிகள் இந்திய ரயில்வேயில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்னவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1808795)
Visitor Counter : 161