சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபாஸ்டேக் தொடர்பான சவால்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAR 2022 1:17PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

மிகக் குறைந்த போக்குவரத்துக் கொண்ட வெகு சில சாலைகளைத் தவிரதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சாவடிகளிலும் ஃபாஸ்டேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

 கட்டண சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலம் தவறான கட்டண கழிவைக் குறைக்க/நீக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால்அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டண சாவடிகளில் மின்னணு முறையில் 100% கட்டண வசூலை எட்டுவதற்காகதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண சாவடிகளில் உள்ள அனைத்து பாதைகளையும் 2021 பிப்ரவரி 15/16 நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் பாதைகளாக அரசு அறிவித்துள்ளது. இதன் விளைவாக கட்டண சாவடிகளில் காத்திருப்பு நேரமும் நீண்ட வரிசைகளும் குறைக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808591

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1808740) வருகையாளர் எண்ணிக்கை : 179
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Gujarati