விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறையில் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAR 2022 1:12PM by PIB Chennai

விண்வெளிப் போக்குவரத்து, கட்டமைப்பு மற்றும் பயன்பாடு போன்ற துறைகளில் ஒட்டுமொத்தத் திறனை மேம்படுத்தி, விண்வெளியில் இந்தியாவின் நலன்களை பாதுகாத்து, அதிகரிக்கச் செய்வதில், விண்வெளித்துறை வாயிலாக மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய செயற்கை கோள்கள் மற்றும் விண்வெளியில் இயங்கி வரும் இதர சாதனங்களை பாதுகாப்பதிலும், விண்வெளியில் கழிவுகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளிலும் இஸ்ரோ முனைப்புடன் பங்காற்றி வருவதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 
 

(வெளியீட்டு அடையாள எண்: 1808678) வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Telugu