இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீரான உணவின் முக்கியத்துவம் குறித்து பாராலிம்பிக் வீரர் மனோஜ் சர்க்கார் எடுத்துரைத்தார், சரிவிகித உணவுப் பற்றாக்குறையால் தாம் இளம் வயதில் சாதிக்க இயலவில்ல என்றும் அவர் குறிப்பிட்டார்

Posted On: 22 MAR 2022 7:16PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானில் உள்ள லலித் ஆர்ய மகிளா கல்லூரியில் சாம்பியனை சந்தியுங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் பங்கேற்று 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உரையாடினார். தமது 18-வது வயதில் சீரான உணவு கிடைக்காததால் மாநில அளவிலான போட்டிகளில்  தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.  சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய மனோஜ் சர்க்கார், சத்தான உணவுகளை வழக்கமாக உண்பது குறித்த வீடியோ காட்சிகளைக் காட்டி மாணவர்களுக்கு விளக்கினார்.

விடுதலை  பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808361

***************

 


(Release ID: 1808387) Visitor Counter : 210


Read this release in: English , Urdu , Hindi , Punjabi