நித்தி ஆயோக்

இந்தியாவை மாற்றும் பெண்கள் விருதுகள் நிகழ்ச்சியின் ஐந்தாவது பதிப்பை நித்தி ஆயோக் நடத்தியது

Posted On: 22 MAR 2022 2:29PM by PIB Chennai

வுமன் டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா (இந்தியாவை மாற்றும் பெண்கள்) விருதுகளின் ஐந்தாவது பதிப்பை நித்தி ஆயோக் நடத்தியது.

நாட்டின் 75-வது ஆண்டு  சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, 75 பெண் சாதனையாளர்களுக்கு இந்த வருடம் விருதுகள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெண் தொழில்முனைவோர் விழாவில் விருதுகளைப் பெற்றனர். தேர்வு செயல்முறை பல மாதங்கள் நீடித்துபல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விருது பெற்றவர்கள் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நித்தி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த், “பெண்களின் முன்மாதிரியான கதைகள் மற்றும் விதிவிலக்கான பணிகளை எடுத்துரைப்பதன் மூலம் அவர்களின் ஆற்றல்மிக்க முயற்சிகளை இந்த விருதுகள் கொண்டாடுகின்றன. தடைகளைத்  தகர்ப்பதில் இருந்து சமமான இந்தியாவுக்கு வழி வகுத்தல்  வரை இந்த வெற்றியாளர்கள் முன்மாதிரியாகத்  திகழ்கிறார்கள்,” என்றார்.

 

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர்  கிரண் பேடிஐ.நா.வின் முன்னாள் உதவிப்  பொதுச் செயலாளர் லக்ஷ்மி பூரிடிஆர்டிஓ ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் பிரிவுத் தலைமை இயக்குநர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ்பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா போன்ற புகழ்பெற்றவர்களால்  விருதுகள் வழங்கப்பட்டன. 

விருது வென்றோரின் பட்டியல் மற்றும் கூடுதல்  விவரங்களுக்குஇந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808119

*******



(Release ID: 1808287) Visitor Counter : 214