நித்தி ஆயோக்

இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிருக்கான விருதுகளின் 5வது நிகழ்வை மார்ச் 21 அன்று நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது


கிரண் பேடி உட்பட 75 பேருக்கு விருதுகள்

Posted On: 20 MAR 2022 3:28PM by PIB Chennai

இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிருக்கான விருதுகளின் 5வது நிகழ்வை நித்தி ஆயோகின் பெண் தொழில்முனைவோர் அமைப்பு 2022, மார்ச் 21 அன்று  ஏற்பாடு செய்துள்ளது.

சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக இந்த ஆண்டு 'வலிமையும் திறமையும் கொண்ட இந்தியா' வுக்குப் பங்களிப்பு செய்ததைக் கொண்டாடுவதற்காக சாதனைப் பெண்கள் 75 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஒருமைப்பாட்டையும் பிணைப்பையும் வெளிப்படுத்துவதற்காக மிகச் சிறந்த பெண்களுக்கு விருதுகள் சமமாக வழங்கப்படவுள்ளன. புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ஐநாவின் முன்னாள் உதவி தலைமைச் செயலாளர் லட்சுமி பூரி, ஏரோநாட்டிக்கல் அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ், பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் தேவஜானி கோஷ், பாடகி இள அருண், தூர்தர்ஷனின் முன்னாள் செய்தி ஒருங்கிணைப்பாளர் சல்மா சுல்தான், அப்போலோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி, டா மிலானோ லெதர்ஸ் நிர்வாக இயக்குனர் ஷிவானி மாலிக் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர்.

 விளையாட்டுத்துறை பெண் ஆளுமைகளான ஷைனி வில்சன், கம்மம் மல்லேஸ்வரி, லாவ்லினா போர்கோஹைன், மான்சி ஜோஷி,
ப்ரனதி நாயக், சிம்ரஞ்சித் கவுர், பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள.

நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், மூத்த ஆலோசகர் அன்னா ராய் இந்தியாவில் உள்ள ஐநாவுக்கான ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப், பெண் தொழில்முனைவோர் அமைப்புக்கான பாடலை இயற்றி, இசையமைத்து, பாடிய கைலாஷ் கெர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள்.

பொதுமக்கள் மற்றும் சமூக சேவை, பொருள் உற்பத்தி பிரிவு, பொருளுற்பத்தி அல்லாத பிரிவு, டிஜிட்டல் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஏழு வகைமைகளில் 2021 அக்டோபர் 1 முதல் 2022 பிப்ரவரி 21 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு விருது பெறும் 75 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு 2022 மார்ச் 21 இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இதனை https://tinyurl.com/WTIAwards என்ற இணையத்தில் காணலாம்:

*********

 



(Release ID: 1807443) Visitor Counter : 207