உள்துறை அமைச்சகம்

ஜம்முவில் இன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் 83-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்

Posted On: 19 MAR 2022 5:20PM by PIB Chennai

ஜம்முவில் இன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் 83-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையையும் உள்துறை ஏற்றுக்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிஆர்பிஎப் அதன் அமைப்பு தினத்தை தில்லிக்கு வெளியே கொண்டாடுவது இதுவே முதல்முறையாகும்.

  இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ஆயுத காவல்படைகளின் வருடாந்தர அணிவகுப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார். இந்த முடிவின் ஒரு பகுதியாக இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்முநகரில் சிஆர்பிஎப்-ன் வருடாந்தர அணிவகுப்பு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

2014-ல் நரேந்திர மோடி பிரதமரான பின் மிக குறுகிய காலத்தில் ஜம்முகாஷ்மீரின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயக நடைமுறையின் ஒருபகுதியாக கிராமங்களில் தலைவர்கள், துணைத் தலைவர்கள் என 30,000 பேர் பிரதிநிதித்துவம் செய்வது ஜம்முகாஷ்மீருக்கும், தேசத்திற்கும் பெருமையான விஷயமாக உள்ளது. வட்டார பஞ்சாயத்துக்களும், மாவட்ட பஞ்சாயத்துக்களும் உருவாக்கப்பட்டுள்ளன வளர்ச்சி நடைமுறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் . 370-வது பிரிவு நீக்கப்பட்டதன் காரணமாக புதிய சட்டங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பெறத் தொடங்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு படைகள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன. தொழில்வளர்ச்சி தொடங்கியுள்ளது. ரூ.33,000 கோடிக்கும் அதிகமாக முதலீடுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பெற்றது. பிரதமரின் திட்டங்களை பூர்த்தி செய்ய பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீரும், மின்சாரமும் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.

சிஆர்பிஎப் பற்றி நாடு எப்போதும் பெருமிதம் கொண்டிருப்பதாக அவர் கூறினார். இந்தப் படைப்பிரிவில் உள்ள 3.25 லட்சம் வீரர்களும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும், தேசத்தின் பாதுகாப்பிற்கும் தங்களை மறுஅர்ப்பணம் செய்துகொள்ள வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

***************



(Release ID: 1807304) Visitor Counter : 214