வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

திறந்தவெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகம், மின்னணு வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தி சிறு வணிகத்தை பாதுகாக்க உதவும் – திரு பியூஷ் கோயல்

Posted On: 19 MAR 2022 1:00PM by PIB Chennai

திறந்தவெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகம், மின்னணு வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தி சிறு வணிகத்தை பாதுகாக்க உதவும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த 5-ஆவது வருடாந்திர தொழில் முனைவோர் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார்.  அப்போது, பிலானி, பிட்ஸ் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடைய வாழ்க்கை மற்றும் பணிகள் நாட்டிற்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது என்று கூறினார்.

பிட்ஸ் கல்வி நிறுவனம், புதிய கண்டுபிடிப்பாளர்களையும், இடர்பாடுகளை  எதிர்கொள்பவர்களையும் உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார்.  இந்த நிறுவனத்தில் பயின்ற இவர், சினிமா, எழுத்து, வர்த்தகம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் வெற்றிகரமாக பணியாற்றி உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.  நாட்டின் புதிய கண்டுபிடிப்பு இயந்திரமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திகழ்கிறது என்று கூறிய அவர், உலகில் நாம் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

தோல்விகளைக் கண்டு அச்சமடையக்கூடாது என்று தொழில் முனைவோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.  புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், துணிச்சலுடன் இருத்தல் ஆகியவற்றை கைவிடக்கூடாது என்று திரு பியூஷ் கோயல் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807249

***************



(Release ID: 1807264) Visitor Counter : 187