ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 மார்ச் 19-ல் இருந்து புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் ரயில்வே பங்கேற்கவுள்ளது

प्रविष्टि तिथि: 18 MAR 2022 3:19PM by PIB Chennai

 2021-22-க்கான சீனியர் (ஆடவர் மற்றும் மகளிர்) தேசிய பளுதூக்கும் போட்டிகள் புவனேஸ்வரில் (ஒடிசா) 19.03.2022 முதல் 31.03.2022 வரை நடைபெறவுள்ளது. இந்திய ரயில்வேயின் விளையாட்டுக்கள் பிரிவான ரயில்வே விளையாட்டுக்கள் வாரியம் வலுவான அணியை இந்த போட்டிக்கு அனுப்பவிருக்கிறது. இந்திய ரயில்வேயின் ஆடவர் அணி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ரயில்வே மகளிர் அணி கடந்த இரண்டு தேசிய சாம்பியன் பட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இப்போது நடைபெறும் போட்டிகளிலும் ரயில்வே அணிகள் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நாட்டிற்கு வெள்ளிப்பதக்கம்  கொண்டு வந்த எஸ்.மீராபாய் சானு போன்ற முக்கியமான பளுதூக்கும் விளையாட்டு ஆளுமைகளை இந்திய ரயில்வே தயார் செய்துள்ளது. இவர் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதலாவது பளுதூக்கும் இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஷ் சிவலி்ங்கம், ரேணுபாலா, சஞ்ஜிதா சானு மற்றும் அர்ஜுனா விருது வென்ற பலரும் இந்திய ரயில்வேயில் உள்ளனர்.

***************


(रिलीज़ आईडी: 1807162) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Odia , Telugu