பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பேரிடர் நிர்வாக திட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்

Posted On: 17 MAR 2022 7:12PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பேரிடர் நிர்வாக திட்டத்தை ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 2022 மார்ச் 17 அன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிட்டார்.  இந்த நிகழ்ச்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுனில் குமார், கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திர சேகர குமார், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் திரு கிருஷ்ண எஸ் வத்சவா, திரு ராஜேந்திர சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.  மாநில பஞ்சாயத்து ராஜ் துறைகளின் மூத்த அதிகாரிகள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மாநில நிவாரண ஆணையர்கள் ஆகியோரும் இணைய வழியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பஞ்சாயத்துகளில் அடித்தள நிலையை பேரிடர் பாதுகாப்பை உருவாக்கும் நோக்கத்துடன் பேரிடர் நிர்வாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  வழிகாட்டுதல்படி, கிராமப் பகுதிகளில் பேரிடர் நிர்வாக நடவடிக்கைகளில் கட்டமைப்பை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். 

பேரிடர் நிர்வாகத்திற்கான தயார் நிலை மற்றும் அடித்தள நிலையில் செயல்பாடுகளை தூண்டுதல் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்புக்கு திரு கிரிராஜ் சிங்  அழைப்பு விடுத்தார்.  பேரிடரை தடுப்பதற்கான  ஏற்பாட்டு உத்தியில் சமூகத்தின் ஈடுபாடு முக்கிய அம்சம் என்பதை கோடிட்டு காட்டிய மத்திய அமைச்சர் ஊரகப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை தொடர்பான செயல்பாடுகளை நீடிக்கச் செய்வதிலும் செயல்படுத்துவதிலும் இது மிகவும் முக்கியமானது என்றார்.

கோவிட் 19 பெருந்தொற்றினை கையாள்வதில் குறிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டான முயற்சிகளில் பஞ்சாயத்துகளின் பங்களிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியதை நினைவுகூர்ந்த திரு கிரிராஜ் சிங் அதேபோல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வடிவமைத்துள்ள பேரிடர் நிர்வாக திட்டத்திலும், ஊரகப்பகுதிகளின் பங்களிப்பு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807011

***************

 



(Release ID: 1807034) Visitor Counter : 897


Read this release in: English , Urdu , Hindi , Marathi