தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய வங்கதேச கூட்டு தயாரிப்பான ஷேக் முஜிபுர் ரகுமான் குறித்த வாழ்க்கை திரைப்படமான 'முஜீப்: தி மேக்கிங் ஆஃப் ஏ நேஷன்' போஸ்டர் வெளியீடு
Posted On:
17 MAR 2022 6:06PM by PIB Chennai
வங்கதேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமான் குறித்த வாழ்க்கை திரைப்படமான 'முஜீப்: தி மேக்கிங் ஆஃப் ஏ நேஷன்' போஸ்டரை பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் வெளியிட்டார். 'வங்கபந்து' என்று அழைக்கப்படும் திரு ஷேக் முஜிபுர் ரகுமான் வாழ்க்கை குறித்த திரைப்படம் இந்தியக் குடியரசு மற்றும் வங்கதேச மக்கள் குடியரசு இடையேயான ஒளி-ஒலி கூட்டு தயாரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது.
மும்பையில் உள்ள தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஷேக் முஜிபுர் ரகுமானின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. வங்கபந்துவின் நூற்றாண்டை ஒட்டி அவரது வாழ்க்கை குறித்த திரைப்படத்தை தயாரிக்கப் போவதாக இந்தியா வங்கதேசமும் அறிவித்தன. தற்போது திரைப்பட தயாரிப்பு நிறைவடைவதை குறிக்கும் வகையில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் திரு ஷியாம் பெனகல், திரு ஷேக் முஜிபுர் ரகுமானின் தனிச் சிறப்புமிக்க வாழ்க்கையைத் திரையில் கொண்டு வருவது கடினமான காரியம் என்றார். "இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான திரைப்படம். அவரது கதாபாத்திரத்தை எந்தவித சமரசத்திற்கும் இடம் இன்றி நாங்கள் காட்டியுள்ளோம். இந்தியாவின் சிறந்த நண்பராக அவர் திகழ்ந்தார். மக்கள் இந்தப் போஸ்டரை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்", என்று திரு ஷியாம் பெனகல் மேலும் கூறினார்.
இந்தியாவின் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் வங்கதேசத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்தது பற்றி குறிப்பிட்ட அவர், "இத்திரைப்படத்தில் பணியாற்றுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே ஒரு சிறந்த அனுபவமாக இருந்துள்ளது. தற்போது, வங்கதேசத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அனுபவமாக இருந்தது," என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவீந்தர் பாக்கர், "சர்வதேச அளவில் இன்றும் புகழப்படும் பிரபல இயக்குநர்களின் திரைப்படங்களுடன் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் பணியாற்றி வந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்காக திரு ஷியாம் பெனகல் அவர்களுடன் மீண்டும் ஒருமுறை இணைவது மிகவும் மகிழ்ச்சி. தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய திரைப்படமாக 'முஜீப்: தி மேக்கிங் ஆஃப் ஏ நேஷன்' இருக்கும்," என்று கூறினார்.
நடிகர் திரு அரிஃபின் ஷுவூ இப்படத்தின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு கனவு நனவானது போல் உள்ளது என்று அவர் தெரிவித்தார். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது.
படத்தின் சமூக ஊடக இணைப்புகள் பின்வருமாறு:
https://www.instagram.com/mujibthefilm/
https://www.facebook.com/profile.php?id=100079113984212
https://twitter.com/mujibthefilm
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806998
*********
(Release ID: 1807016)
Visitor Counter : 191