உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
தாவரம் சார்ந்த உணவு தொழில்கள் சங்கத்தினர் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேலை சந்தித்து சூழலியலை மேம்படுத்த வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
16 MAR 2022 2:16PM by PIB Chennai
புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாவரம் சார்ந்த உணவு தொழில்கள் சங்கத்தின் (பிபிஎஃப்ஐஏ) நிர்வாகிகள் உணவு பதப்படுத்தல் தொழில்கள் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேலை புதுதில்லியில் சந்தித்தனர்.
சங்கத்தின் செயல் இயக்குநர் திரு சஞ்சய் சேத்தி தலைமையிலான குழு, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தாவரங்கள் அடிப்படையிலான உணவுத் துறையின் நிலை குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கியது.
துடிப்பான வளர்ச்சிக்கு இந்தத் துறை தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு சேத்தி, கொள்கை மாற்றங்கள், திறன் மேம்பாடு, வணிகத்தை எளிதாக்குதல் மற்றும் பிற தலையீடுகள் மூலம் உள்நாட்டு மற்றும் உலகச் சந்தைளில் இதை பெரிய தொழில்துறையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரின் வழிகாட்டுதலையும் ஆதரவையும் கோரினார். உலகளாவிய தாவரங்கள் அடிப்படையிலான உணவு சந்தை 2025-ல் 77.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர் சங்கிலி சரக்கு போக்குவரத்து குறித்து விவாதிக்கவும், முக்கிய நகரங்களுக்கிடையே தினசரி பார்சல் செயல்பாடுகளை எளிமைப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராயவும் அமைச்சகத்துடனான ஒரு சிறப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு சங்கத்தினரை இணை அமைச்சர் கேட்டுக்கொண்டார். சங்கத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் இணைந்து செயல்படுமாறு இன்வெஸ்ட் இந்தியா இணை துணைத் தலைவர் திரு கௌரவ் சிஷோடியாவை அவர் கேட்டுக்கொண்டார்.
துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து புரிந்து கொள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்கள் கலந்து கொள்ளும் இரு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சங்கத்தின் உதவியை அமைச்சர் நாடியதாக திரு சேத்தி கூறினார். சங்கத்தின் இளம் உந்துசக்தி மற்றும் உற்சாகத்தை அமைச்சர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806516
************************
(रिलीज़ आईडी: 1806742)
आगंतुक पटल : 212