தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளியேறும் மின்சக்தியின் சுகாதார தாக்கங்கள் தொடர்பான கற்பிதங்களை போக்குவதற்கு தில்லி-எல்எஸ்ஏ இணையவழி கருத்தரங்கை நடத்தியுள்ளது
Posted On:
16 MAR 2022 12:18PM by PIB Chennai
“மின்சக்தி வெளியேற்றம் மற்றும் தொலை தொடர்பு கோபுரங்கள்” குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு தொலை தகவல் தொடர்பு துறையும், தில்லி-எல்எஸ்ஏவும் புதுதில்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்தன. நம்பகமான தொலை தகவல் தொடர்பு கட்டமைப்புக்கு அதிகரித்து வரும் செல்பேசி கோபுரங்களின் தேவை மற்றும் செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளியேறும் மின்சக்தியின் சுகாதார தாக்கங்கள் தொடர்பான கற்பிதங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் தொலை தகவல் தொடர்பு துறையின் ஆலோசகர் திரு.நிஜாமுல் ஹக், தில்லி-எல்எஸ்ஏ துணைத் தலைமை இயக்குனர் திரு.அருண் குமார் ஆகியோர் உரையாற்றினர். செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளியேறும் இஎம்எஃப் கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சனைகள் பாதிப்புகள் குறித்த கேள்விகளுக்கு புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இணை பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் விவேக் டாண்டன் விளக்கமளித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806453
************
(Release ID: 1806590)
Visitor Counter : 190