இந்திய போட்டிகள் ஆணையம்
மைக்ரோ லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சவுத் எல்ம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.வி. நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
16 MAR 2022 9:11AM by PIB Chennai
மைக்ரோ லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சவுத் எல்ம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (எஸ்இஐ) பி.வி. நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
எஸ்இஐ நிறுவனம் நெதர்லாந்து சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனமாகும். இதன் பங்குதாரர்களின் குறிப்பிட்ட தனியார் சமபங்கு நிதியங்கள் வார்பர்க் பின்கஸ் எல்எல்சி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த நிறுவனம் தமது துணை நிறுவனங்களுடன் இணைந்து ஸ்டென்ட், இதய வால்வுகள், செயற்கை உறுப்புகள் போன்ற பல வகையான மருத்துவ கருவிகள் மற்றும் சாதனங்களின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கான ரோபோக்கள் அல்ட்ரா சோனிக் கருவிகள் போன்ற தனித்தன்மை மிக்க மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைகளுக்கு விற்பதிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபடுகிறது.
****
(रिलीज़ आईडी: 1806571)
आगंतुक पटल : 238