உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனே விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய முனையம்

Posted On: 16 MAR 2022 12:46PM by PIB Chennai

இந்திய விமான நிலைய ஆணையத்தின் புனே விமான நிலையத்தில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அதிக விமானங்களை நிறுத்தும் இட வசதி மற்றும் அதிக பயணிகளை கையாளும் திறனுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் தற்போது முழுவீச்சில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.475 கோடி செலவில் கட்டப்படும் இந்த இந்த முனையம் நெரிசலை வெகுவாகக் குறைக்க உதவும்.

தற்போதுள்ள விமான நிலைய முனையம் 22ஆயிரத்து 300 சதுர மீட்டரில்  செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 70 லட்சம் பயணிகளை இந்த முனையம் கையாண்டு வருகிறது. அதிக பயணிகளை கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் ஐந்து லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள முனையத்துடன் ஒருங்கிணைந்து 7,50,000 சதுரஅடி பரப்பில் இது உருவாகிறது. இந்த முனையத்தில் ஆண்டுக்கு ஒரு கோடியே  60 லட்சம் பயணிகள் கையாளப்படுவார்கள்.

குளிர்சாதன வசதி கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் (பழைய கட்டடத்தையும் இணைத்து) பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாகும். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு நிரந்தர தீர்வாக, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.120 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

திரு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குறிப்பிட்டதைப் போல புனே நகரம் பல்வேறு நவீன உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெற்று வருகிறது. அவரது  தொலைநோக்கு மற்றும் பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் இந்த உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806467

------  


(Release ID: 1806498) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Marathi , Hindi