நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் வாரம் மற்றும் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டத்தை நுகர்வோர் நலத்துறை தொடங்கியது

प्रविष्टि तिथि: 15 MAR 2022 6:53PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் வாரத்தை, நுகர்வோர் நலத்துறை 2022 மார்ச் 14 அன்று தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் உட்பட 23 மாநிலங்களில் ஊரக மக்கள் தொடர்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்திய தரக்குறியீடுகள் ஆபரணங்கள் மீதான முத்திரைகள், முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீது பார்க்க வேண்டிய விவரங்கள், முறையான எடைக் கற்கள்,  மற்றும் அளவீடுகளை பயன்படுத்துதல் குறித்து இந்த நிகழ்ச்சிகளில் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், குறைபாடுகள் பற்றி  தேசிய நுகர்வோர் உதவி எண் 1 4 4 0 4  அல்லது 1 8 0 0-1 1-4 0 0 க்கு எவ்வாறு புகார் தெரிவிப்பது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

நுகர்வோர் உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மைகவ் இணைய தளத்தில் வினாடி வினாடி போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் 13 வரை நடைபெறும். பங்கேற்பை ஊக்குவிக்க சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் வேங்கை வாசல் கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806292

***************

 


(रिलीज़ आईडी: 1806323) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada