இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

இமயமலைப் பகுதியில் ரூ.506.23 கோடியில் பல்வேறு வகையிலான 77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது; திரு அனுராக் தாக்கூர்

Posted On: 15 MAR 2022 5:04PM by PIB Chennai

நாட்டில் விளையாட்டுக்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்த இமயமலைப் பகுதி உட்பட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.   விளையாட்டுக்கள் இந்தியா திட்டத்தின் கீழ், இமயமலைப் பகுதியில் ரூ.506.23 கோடியில் பல்வேறு வகையிலான 77 விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தத் துறைக்கான அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்த மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர், மேலும், 24 விளையாட்டுக் கல்வி கழகங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றார். மாவட்ட அளவில் 199 விளையாட்டுக்கள் இந்தியா மையங்களும், மாநில அளவில் 11 விளையாட்டுக்கள் இந்தியா மையங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு வசதிகள் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ.273.85 கோடி மதிப்புக்கு முப்பது விளையாட்டு கட்டமைப்புத் திட்டங்களுக்கும், விளையாட்டு சாதனங்களுக்கும், ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களின் கீழ், தமது அமைச்சகத்தால் ரூ.4,694.92 கோடி  ஒதுக்கப்பட்டு ரூ.4,590.89 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக திரு அனுராக் தாக்கூர் கூறினார்.

************



(Release ID: 1806282) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Punjabi