உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
மலைப் பகுதிகளில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் மெகா உணவுப் பூங்காக்களை நிறுவ சலுகைகள்
Posted On:
15 MAR 2022 12:49PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த உணவுப் பதப்படுத்தல் துறை இணை அமைச்சர் திரு .பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைப்பது உட்பட உணவுப் பதப்படுத்தும் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இதன் துணை திட்டங்களின் கீழ், வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் உட்பட) மற்றும் இமயமலை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட பகுதிகள் மற்றும் தீவுகள் போன்ற கடினமான பகுதிகளில் உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் மெகா உணவுப் பூங்காக்களை அமைப்பதற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சலுகைகளின் மதிப்பீட்டின் போது குறைந்த தகுதி வரம்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான அதிக மானிய விகிதம் ஆகியவை அடங்கும். மெகா உணவுப் பூங்காக்கள் உட்பட பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் தொடர்புடைய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட மானியங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806079
****
(Release ID: 1806224)
Visitor Counter : 196