சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஹைட்ரஜன் அடிப்படையிலான நவீன எரிபொருள் மின்கல வாகனத்துக்கான முன்னோடித் திட்டத்தை திரு நிதின் கட்கரி தொடங்கிவைக்கிறார்
Posted On:
15 MAR 2022 2:26PM by PIB Chennai
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா, தூய்மையான எரிசக்தி, குறைந்த கரியமில உமிழ்வு பாதையை தேர்ந்தெடுக்க உறுதிப்பூண்டுள்ளது. எரிசக்தி உத்தியில் முக்கிய அம்சமாக ஹைட்ரஜன் உள்ளது. இது குறைந்த கரியமில உமிழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. கார்பன் அளவை வெகுவாக குறைப்பதில் பசுமை ஹைட்ரஜனுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே இதில் உலகம் முழுவதும் முன்னெப்போதும் காணாத அளவுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. மிகப்பெரிய கார்கள், பேருந்துகள், லாரிகள், கப்பல்கள், ரயில்கள் ஆகியவற்றுக்கு நீண்ட கால அளவில் பசுமை ஹைட்ரஜன் மூலம் நடைபெறும் போக்குவரத்து முக்கியத் தொழில்நுட்ப வாய்ப்பாக இருக்கும்.
எரிசக்தித்துறையில் தன்னிறைவை எட்ட வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ப, டொயாட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், வாகன தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்துடன் இணைந்து, உலகின் மிக நவீனமான எரிபொருள் மின்கள வாகனத்தை உருவாக்கியுள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் டொயாட்டா மிரை இந்திய சாலைகளுக்கும், வானிலைக்கும் ஏற்றதாக அது இருக்கும். ஹைட்ரஜன் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பும் வகையில் இது முதலாவது முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்த முன்னோடித் திட்டத்தை புதுதில்லியில் நாளை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
***************
(Release ID: 1806149)
Visitor Counter : 392