பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தூய்மையான சமையல் எரிவாயு ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 14 MAR 2022 2:57PM by PIB Chennai

உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 01.03.2022 வரை 1 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக பெட்ரோலியம் & இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். தடையற்ற எரிவாயு இணைப்பு பெற ஏதுவாக 5 கிலோ சிலிண்டர்கள், ஏற்கனவே இணைப்பு பெற்றவர்களுக்கு இரண்டாவது சிலிண்டர் ஒதுக்கீடு, புதிய இணைப்புப் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தல், மின்னணு ரசீதுகள் வழங்கப்படுவதுடன், மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் ஒத்துழைப்புடன், தூய்மையான சமையல் எரிவாயு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், 34,51,561 எரிவாயு இணைப்புகளும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 14,221 இணைப்புகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805739

***************


(रिलीज़ आईडी: 1805935) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Manipuri , Punjabi