தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு
Posted On:
14 MAR 2022 3:59PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு. ராமேஷ்வர் தெலி மக்களவையில் அளித்த பதிலில் கூறியதாவது:
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட, காலாண்டு தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பின் படி, 2021 மார்ச் மாதம் வரை, கோவிட் தொற்று காலத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை வீதம் 20.8 சதவீதமாக அதிகரித்தது. உள்நாட்டு மொத்த உற்பத்தி 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் -23.8 சதவீதமாக குறைந்தது. அதைத் தொடர்ந்த காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டதால், வேலைவாய்ப்பின்மை வீதம் 9.3 சதவீதமாக மீண்டது. 2020-21ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஜிடிபி 1.6 சதவீதமாக மீண்டது.
2020-21ம் ஆண்டின் முதல் காலாண்டில், தொழிலாளர் வீதம் 36.4 சதவீதமாக குறைந்தது. இது அதே ஆண்டின் கடைசி காலாண்டில் 43.1 சதவீதமாக அதிகரித்தது.
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
கோவிட்-19 பாதிப்பை குறைக்க, தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆத்மநிர்பார் பாரத் நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியுதவியை மத்திய அரசு வழங்கியது. நாட்டை தற்சார்புடையதாக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், இந்த நிதியுதவி திட்டத்தில் பல நீண்டகால திட்டங்கள், கொள்கைகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805785
***********************
(Release ID: 1805903)