வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்குபகுதிக்கான பிரதமரின் வளர்ச்சி முன்முயற்சி (பிஎம்-டிவைன்)
प्रविष्टि तिथि:
14 MAR 2022 2:18PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2022-23 மத்திய பட்ஜெட்டில் வடகிழக்குபகுதிக்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி ( பிஎம்-டிவைன்) என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கதி சக்தி திட்டத்தின் அடிப்படையில் உள்கட்டமைப்பு மற்றும் வடகிழக்கின் தேவைகளின் அடிப்படையில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இது நிதியளிக்கும்.
பல்வேறு துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை இது செயல்படுத்தும். 2022-23 பட்ஜெட் உரையின்படி ரூ 1,500 கோடி ஆரம்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805724
*****
(रिलीज़ आईडी: 1805854)
आगंतुक पटल : 255