வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 பிப்ரவரியில் இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஆண்டு இதே காலத்தை விட 25.41 சதவீதம் அதிகரித்து 57.03 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2022 1:23PM by PIB Chennai

2022 பிப்ரவரியில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்தது) 57.03 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தை விட 25.41 சதவீதம் அதிகமாகும். 2020 பிப்ரவரியை விட ஆக்கப்பூர்வமான வளர்ச்சி 27.07 சதவீதமாகும். 2022, பிப்ரவரியில் மொத்த இறக்குமதி 69.35 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட இது 35.64 சதவீதமும், 2020, பிப்ரவரியில் இவற்றின் வளர்ச்சி 44.62 சதவீதமாகவும் இருந்தது.

2020-21 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் ஏற்றுமதி அளவு ரூ.19,02,400.54 கோடியாக இருந்தது. 2021-22-ல் இதே காலத்தில் ஏற்றுமதி 27,87,495.18 கோடியாக அதிகரித்தது.

இதே போல் இறக்குமதி அளவு 2020-21 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 25,60,009.18 கோடியாக இருந்தது. 2021-22 இதே காலத்தில் ரூ.40,96,174. 90 கோடியாக அதிகரித்தது.

வர்த்தக பற்றாக்குறை 2021-22-ல் ரூ.13,08,679.72 கோடியாக உள்ளது.

சேவைகள் வர்த்தகம் 2021-22-ல் ஏப்ரல் முதல் ஜனவரி வரை ஏற்றுமதி ரூ.15,19,620.78 கோடியாகவும், இறக்குமதி 8,81,050.41 கோடியாகவும் இருந்தது. இதில் வர்த்தகப் பற்றாக்குறை 6,38,570.38 கோடியாகும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805697

 

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1805800) வருகையாளர் எண்ணிக்கை : 625
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu