தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
‘‘டிராய் சட்டத்தின் 25 ஆண்டுகள்’’குறித்த கருத்தரங்கு: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
Posted On:
13 MAR 2022 4:08PM by PIB Chennai
‘‘இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் (டிராய்) சட்டத்தின் 25 ஆண்டுகள் என்ற கருத்தரங்கை தொலைதொடர்பு பிரச்னைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (TDSAT) இன்று நடத்தியது. இதை மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இந்தியாவில் தொலைத் தொடர்பு முறையை ஒழுங்குபடுத்த, டிராய் சட்டம் கடந்த 1997ம் ஆண்டு இயற்றப்பட்டது. இது தொலை தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்களிடையே பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறையை வழங்குகிறது. டிராய் இடமிருந்து பிரச்னைக்குரிய வழக்குசம்பந்தமான செயல்பாடுகளை எடுத்துக்கொள்ள, இது கடந்த 2000 ஆண்டு திருத்தப்பட்டு தொலைத் தொடர்பு பிரச்னைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கை நடத்துவதற்காகத் தொலைத் தொடர்பு பிரச்னைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அழியாத மற்றும் முற்றிலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலைக்கற்றைதான் தொலை தொடர்புத் துறையின் தனித்துவமான பண்பு. இது தவிர அதிக மூலதனம், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ற வகை, பாதுகாப்பு முக்கியத்துவம் போன்றவை இதர தனித்தவமான பண்புகளாக உள்ளன. கோவிட் தொற்று சூழலுக்குப்பின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிக மிக்கியமானதாக மாறியுள்ளது. அதனால் அதற்கு ஏற்றவகையில் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.
மத்திய அரசின் முடிவுகளுக்கு பின்னால் அந்தியோதயா மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற தத்துவம் உள்ளது. இந்த சிந்தனையுடன்தான், நாட்டின் டிஜிட்டல் இடைவெளியை குறைக்க மத்திய அரசு விரும்பகிறது. இரண்டாவது மிகப் பெரிய தத்துவமான ‘தற்சார்பு இந்தியா,’ அரசின் யுக்தி மற்றும் அணுகுமுறையைக் காட்டுகிறது. 4ஜி தொழில்நுட்பம், இந்திய நிபுணர்களால் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது. 5-ஜி தொழில்நுட்பத்திலும் இந்திய நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்கு முக்கியமானது. அதே நேரத்தில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான பணிகளையும் நாம் தொடங்கியுள்ளோம். 6ஜி தொழில்நுட்பத்தில் நம்மால் முன்னேறி ஒட்டுமொத்த உலகுக்கும் வழிகாட்ட முடியும். தொலைத் தொடர்புத் துறையை, விரைவான வளர்ச்சியுள்ள துறையாக மாற்ற வழக்கறிஞர்கள், நீதித்துறை, தொழில்துறை, ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நீதித்துறையிலும், தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியிலும் ஒரே நேரத்தில் பணியாற்றிய தனது அனுபவத்தை நீதிபதி இந்திரா பானர்ஜி பகிர்ந்து கொண்டார். கடந்த 1994ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை, தொலைத் தொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1805534
***********
(Release ID: 1805557)
Visitor Counter : 280