இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘சாம்பியனை சந்தியுங்கள்’ என்ற திட்டத்தின்படி கோவாவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்ற இந்தியாவின் நட்சத்திர ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை மானா படேல்; இது தமது ‘தேசிய கடமை’ என்று கூறியுள்ளார்

Posted On: 12 MAR 2022 4:34PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவ முன் முயற்சியான சாம்பியனை சந்தியுங்கள்’ நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் நட்சத்திர ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை மானா படேல், கோவா பாம்போலிமில் உள்ள டாக்டர் கே பி ஹெட்கேவர் உயர்நிலைப் பள்ளிக்கு  சென்றார்.

 அங்கு அவர், 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் உரையாடினார். 

அப்போது சரிவிகித உணவின் முக்கியத்துவம் குறித்தும், அது எவ்வாறு  ஒவ்வொருவரையும்  கட்டுக்கோப்புடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.  “கோவாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, பொழுதுபோக்குடன் கூடிய உரையாடல் நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது,  ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் குறித்து  மாணவர்கள் அறிந்து கொள்ள இந்நிகழ்ச்சி உபயோகமாக இருந்திருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை கூறியுள்ளார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, கல்வி அமைச்சகங்கள் இணைந்து, “சாம்பியனை சந்தியுங்கள்” என்ற இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805347

***************


(Release ID: 1805358) Visitor Counter : 189