பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பராமரிப்புப் பணியின் போது, எதிர்பாராதவிதமாக ஏவுகணை பாய்ந்தது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்

Posted On: 11 MAR 2022 6:33PM by PIB Chennai

புதுதில்லி, மார்ச் 11, 2022:

கடந்த மார்ச் 9ம் தேதி, வழக்கமான பராமரிப்புப்  பணியில் ஈடுபட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏவுகணை ஒன்று சீறிப் பாய்ந்தது. 

இது குறித்து  உயர்  நிலை  விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எதிர்பாரதவிதமாக சீறிப் பாய்ந்த ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்து வெடித்தது. இச்சம்பவம் மிகுந்த வருத்தத்துக்குரியது என கூறியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாதது நிம்மதி அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

                                                                                ********************


(Release ID: 1805211) Visitor Counter : 513


Read this release in: English , Urdu , Hindi , Bengali