விவசாயத்துறை அமைச்சகம்
தில்லி பூசா வேளாண் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர்
प्रविष्टि तिथि:
10 MAR 2022 6:26PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் தில்லியில் நடத்திய வேளாண் அறிவியல் காண்காட்சியின் 2வது நாளில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்தக் கண்காட்சியின் முக்கியக் கருப்பொருள் ‘‘தொழில்நுட்ப அறிவுடன் தற்சார்பு விவசாயியை’’ உருவாக்குதல். நாடு முழுவதும் இருந்து சுமார் 12,000 விவசாயிகள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று 1,100 குவின்டால் கலப்பின விதைகளை வாங்கினர். 2-ம் நாளில் 4 தொழில்நுட்ப அமர்வுகளும் நடந்தன. இதில் ஸ்மார்ட் விவசாயம், இயற்கை விவசாயம், அதிக உற்பத்திக்கு ஹைட்ரோபோனிக் மற்றும் ஏரோபோனிக் விவசாயம், வேளாண் ஏற்றுமதி குறித்து விளக்கப்பட்டது.
மூன்று வகை பாஸ்மதி அரசி வகைகள், கலப்பினப் பூசா பாஸ்மதி 1847, 1885, 1886 ஆகிய ரகங்களின் விதைகள் இந்தக் கண்காட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்தப் புதிய வகை விதைகளை அவர்களே உற்பத்தி செய்ய முடியும். புதிய பயிர் வகைகள், பாதுகாப்பான காய்கறி, பூக்கள் விவசாயம் குறித்த நேரடி செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தயாரித்த விவசாயக் கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேம்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் கன்றுகளின் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதுதவிர வேளாண் பொருட்கள், ரசாயணங்கள், புத்தாக்க விவசாயிகள் உருவாக்கிய பொருட்கள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
100க்கும் மேற்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி மையங்கள், 225 அரங்குகளில் தங்களின் நவீன தொழில்நுட்பங்களை காட்சிக்கு வைத்திருந்தன. முதல் நாளில் 15,000 விவசாயிகள் பங்கேற்று பல தொழில்நுட்பங்களையம் , ஆலோசனை சேவைகளையும் அறிந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804826
**************
(रिलीज़ आईडी: 1804895)
आगंतुक पटल : 265