நித்தி ஆயோக்
புதுமைகள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க அடல் இன்னோவேஷன் மிஷன், நிதி ஆயோக் & கிட்எக்ஸ் கைகோர்ப்பு
प्रविष्टि तिथि:
10 MAR 2022 5:47PM by PIB Chennai
அடல் இன்னோவேஷன் மிஷன் (எய்ம்) மற்றும் நிதி ஆயோக் ஆகியவை கிட்எக்ஸ் வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் உடனானக் கூட்டை இன்று அறிவித்துள்ளன. கிட்எக்ஸின் தற்போதைய தொழில்நுட்ப தளமான "இகிகாய்"-ஐ பயன்படுத்தி எய்ம்-ன் முதன்மை நிகழ்ச்சிகளான "டிங்கெர்ப்ரூனர்", "ஏடிஎல் மாரத்தன்" மற்றும் பிற சவால்களை நடத்துவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம் நெட்வொர்க்கில் இந்தியா முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டங்கள் கிடைக்கும். செலவே இல்லாமல், டிஜிட்டல் முறையில் எளிதான வகையில் ஏடிஎல் நெட்வர்க்கில் இணைந்துள்ள ஒவ்வொரு மாணவருக்கும் இது கிடைக்கும்.
இரண்டு வருடங்களில் குறைந்தது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் கற்பவர்களை எய்ம் மற்றும் கிட்எக்ஸ் சென்றடைவதோடு, புதுமை மற்றும் தொழில்முனைவு குறித்த எய்ம் தனியுரிமத் திட்டங்களுக்கு அவர்களை தயார்படுத்தவும் உதவும். கடந்த 1 வருடத்தில் 1,500+ பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிட்எக்ஸ் தளத்தைப் பயன்படுத்திப் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், அடல் டிங்கரிங் லேப்ஸ் முயற்சியின் கீழ் 100 பள்ளிகளை கிட்எக்ஸ் தத்தெடுக்கும். தேசியக் கல்விக் கொள்கை-2020-ஐ இந்த 100 பள்ளிகளில் செயல்படுத்த நிறுவனத்தின் முக்கியப் பொருட்களுக்கான இலவச உரிமங்களை கிட்எக்ஸ் கொடுக்கும்.
2020-ல் தொடங்கப்பட்ட கிட்எக்ஸ்-ன் முதன்மைத் தயாரிப்பு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற செயல்பாடுகளை அனுபவப்பூர்வமாகக் கற்றல் மற்றும் குழந்தைகளின் உள்ளார்ந்த திறனைக் கண்டறிவதன் மூலம் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804813
***********
(रिलीज़ आईडी: 1804882)
आगंतुक पटल : 307