தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் மற்றும் உலகளாவிய தென் பகுதி நாடுகளில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு புதுவித வேலை குறித்த சர்வதேச இணையக் கருத்தரங்கு

Posted On: 10 MAR 2022 4:59PM by PIB Chennai

பிரிக்ஸ் மற்றும் உலகளாவிய தென் பகுதி நாடுகளில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு புதுவித வேலை குறித்த சர்வதேச இணையக் கருத்தரங்கை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்தியது.  நொய்டாவில் உள்ள வி.வி.கிரி தேசியத் தொழிலாளர் மையம்,  சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சர்வதேசப் பயிற்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த இணையக் கருத்தரங்கு  நேற்று நடத்தப்பட்டது.

புதுவித வேலை; ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் சவால்கள் மற்றம் புதுவித வேலைவாயப்பை மேம்படுத்தும் கொள்கை தொடர்பாக விவாதிப்பதுதான் இந்த சர்வதேச இணையகருத்தரங்கின் நோக்கம்.

இந்த இணையகருத்தரங்கை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செயலாளர் திரு சுனில் பர்த்வால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு புதுவித வேலைபார்க்கும் முறை, புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேநேரத்தில் சேவை நிலவரம், சமூகப் பாதுாப்புப் பலன்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண தகுந்த அமைப்பு போன்றவற்றில் புதிய சவால்கள் உள்ளன’’ என்றார்.  இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச தொழிலாளர்  அமைப்பின் இயக்குனர் திரு. டாக்டர் வால்டர் பேசுகையில்,  ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் தொடர்பாக நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

‘புதுவித வேலைக்கான கொள்கைச் சூழல் குறித்த விவாதத்துக்கு தலைமை தாங்கிப் பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் ஷஷாங் கோயல், ஒப்பந்தகாரர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கான புதுவித வேலையைச் சந்தைகள் உருவாக்கி வருகின்றன எனத் தெரிவித்தார். சமூகப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.

புதுவித வேலையில் உள்ள வரையறைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் மூத்த பொருளதார நிபுணர் டாக்டர் உமா ராணி ஆலோசித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804795

***********


(Release ID: 1804877) Visitor Counter : 210